யார் இந்த ஓஷோ?
இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குச்சு வாடா என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அன்று ஓஷோ பிறந்தார். ஓஷோவின் இயற்பெயர் ரஜினீஷ் சந்திர மோகன் ஆகும்.ஓஷோவுக்கு தனது பதின்ம பருவம் முதலே தியானப் பயிற்சி செய்வதில் அதிகம் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. தனது 21 ஆம் வயதில் தியானத்தின் மூலம் ஞானத்தை அடைந்தார் ஓஷோ என்ற ரஜினீஷ் சந்திரமோகன்.இந்தியாவின் மற்ற ஆன்மீக மகான்களை ஒப்பிடும் போது ஓஷோ மிகவும் தனித்துவம் மிக்கவர் ஆவார். அவரின் தத்துவங்கள் அனைத்தும் வித்தியாசமானதாகவும் புதுமையானதாகவும் இருக்கும்.ஓஷோவின் பல உயரிய துத்துவங்களில் 10 தத்துவத்துளிகளை இந்த பதிவில் பாருங்கள்.
ஓஷோவின் தத்துவத் துளிகள்:
1. கொஞ்சம் முட்டாளாய் இருந்தால் வாழ்க்கையை ரசிக்கலாம்.கொஞ்சம் புத்திசாலியாய் இருந்தால் தவறுகளை திருத்தலாம்.
2. உன்னை தவிர வேறு யாராலும் உன்னை தடுக்க முடியாது.உன் வழியில் நீயே குறுக்கே நிற்காதே.
3. நகைச்சுவை உணர்வு,ஆழ்ந்த அன்பு செலுத்தும் தன்மை இவைகளோடு நாம் இருப்பது தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் ஆகும்.
4. இறைவன் வேண்டியதை தருபவர் அல்ல.இறைவன் வாழ்க்கைக்கு தேவையானதை தருபவர் ஆவார்.
5. ஒருவர் தன்னிடமே சமாதானமாய், சுகமாய் இருக்க முடியவில்லை என்றால் அவரால் யாரிடமும் சமாதானமாய் அமைதியாய் இருக்க முடியாது.
6. பேசும்போது பயப்படாதீர்கள். அதேபோல பயப்படும்போது பேசாதீர்கள்.
7. பயத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம் ஆகும்.
8. நிபந்தனை இன்றி உன்னையே கொடுப்பது தான் அன்பு.
9. இந்த கணம் தான் உண்மை. இதைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்.
10. அகங்காரத்திற்கு சிரிக்கவே தெறியாது.
ஓஷோவின் இந்த தத்துவத்துளிகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள்,உறவுகள் மற்றும் அன்பிற்குரிய அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
0 Comments