Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உலகத்தை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!!!

Amazing facts about world in tamil, interesting facts in tamil

இந்த உலகத்தில் நம்மை வியக்க வைக்கக்கூடிய வியப்பூட்டும் பல விஷயங்கள் இருக்கின்றன.உலத்தை பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...!

உலகை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் :

நொடிக்கு 4 குழந்தைகள் !

Amazing facts in tamil , interesting facts in tamil

உலகத்தில் சராசரியாக ஒவ்வொரு நொடியிலும் 4 குழந்தைகளும், ஒவ்வொரு நிமிடத்திலும் 250 குழந்தைகளும்,ஒவ்வொரு மணி நேரத்திலும் 15,000 குழந்தைகளும், ஒவ்வொரு நாளைக்கும் 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளும் பிறக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் புதியதாக இந்த உலகத்தில் பிறக்கின்றன.

நொடியில் 2 மரணம் !

Amazing facts in tamil, interesting facts in tamil

உலகில் சராசரியாக ஒரு நொடியில்  இரண்டு மனிதர்கள் மரணமடைகிறார்கள் ஒரு நிமிடத்தில் 105 மனிதர்கள் மரணமடைகிறார்கள், ஒரு மணி நேரத்தில் 6,392 மனிதர்கள், ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் மரணமடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50 மில்லியன் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.


குள்ள மனிதர்கள் :

Amazing facts in tamil, interesting facts in tamil

உலகிலேயே குள்ளமான மனிதர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேசியா ஆகும்.  இந்தோனேஷியர்களின் சராசரி உயரம் 5 அடி 1.8 அங்குலம் ஆகும்.


உயரமான மனிதர்கள் :

இதே போல உலகிலேயே உயரமான மனிதர்கள் அதிகமாக வாழும் நாடு நெதர்லாந்து ஆகும்.இந்த நாட்டு மக்கள் சராசரியாக 6 அடி உயரமுள்ளவர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அடேங்கப்பா !!! 

Amazing facts in tamil, interesting facts in tamil

உலகின் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா,சீனா,பிரேசில்  உள்ளிட்ட நாடுகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விட இன்றைக்கு ஃபேஸ்புக் செயலியின் பயனாளர்களின்  எண்ணிக்கை அதிகமானதாகும்.உலகம் முழுக்க சுமார் 2 பில்லியன் மக்கள் பேஸ்புக் செயலியின் பயனாளர்களாக உள்ளனர் என்ற சுவாரஸ்யமான உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

அடக்கடவுளே! 94 குழைந்தைகளா ?!

Amazing facts in tamil, interesting facts in tamil

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஹிட்லரையே அதிரவைத்த விலங்கு!

Amazing facts in tamil, interesting facts in tamil

உலகையே அதிரவைத்த ஹிட்லர் ஒரே ஒரு விலங்கை பார்த்தாலே கொலைநடுங்கி விடுவாராம்.அது என்ன விலங்கு என்று கேட்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல அது சிங்கமோ, புலியோ, காண்டாமிருகம்,யானையோ அல்லது வேறு எந்த மிருகமும் கிடையாது. ஹிட்லரையே அச்சப்பட வைத்த விலங்கு எது என்று தெரியுமா? அந்த மிருகத்தின் பெயர் பூனை!உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை. பூனைகளை பார்த்தால் பயப்படும் Ailurophobia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.


அதிக தீவுகள் கொண்ட நாடு :

Amazing facts in tamil, interesting facts in tamil

உலகிலேயே அதிக அளவிலான தீவுகளைக் கொண்ட நாடு ஸ்வீடன் ஆகும். இந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக 2,25,800 தீவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆயிரம் தீவுகள் மட்டுமே மனிதர்கள் வாழும் தீவுகளாக உள்ளன.

அய்யோ! கேட்டாலே முகம் சுழியுதே...

Amazing facts in tamil, interesting facts in tamil

தாய்வானில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவறை கோப்பையை போன்றவற்றில் தான் உணவை பரிமாறுகிறார்கள்.கேட்கும் முகம் சுழிகிறதா...? அதுமட்டுமின்றி அந்த உணவகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் கழிவறை சம்பந்தமானதாகவே இருக்கிறது என்ற ஆச்சரியமான மற்றும் முகம் சுழிக்க வைக்கக்கூடிய ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.


கருப்பான் பூச்சிகள் :

Amazing facts in tamil, interesting facts in tamil

இந்த பூமியில் டைனோசர்களின் காலத்திற்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கருப்பான்பூச்சி உயிரினம் வாழ்ந்து வருகிறது.

அமைதி அமைதி அமைதி...!

Amazing facts in tamil, interesting facts in tamil

இந்த உலகத்தில் சத்தமே இல்லாத அமைதியான இடம் என்று எந்த ஒரு இடமும் கிடையாது. நீங்கள் அமைதியான இடம் என்று கருதக்கூடிய இடங்களில்கூட துளி அளவிலாவது கண்டிப்பாக சத்தம் இருக்கும்.இந்த உலகத்தில் 100 சதவீதம் அமைதியான இடம் இல்லாவிட்டாலும்,உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள 'The Quiet Room' அதாவது 'அமைதி அறை' என்ற அறை தான் இந்த உலகத்திலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும். இந்த அறையில் இருக்கும் ஒலியின் அளவு 20.35 டெசிபல் ஆகும்.இந்த அளவிலான சத்தத்தை சாதாரண மனித காதுகளால் கேட்கவே முடியாது.

மேகத்தின் எடை எவ்வளவு தெரியுமா ?!

Amazing facts in tamil, interesting facts in tamil

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? அப்படி நினைத்திருந்தால் அந்த கேள்விக்கான விடையை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும்.அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

Post a Comment

0 Comments

.