Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உலர் திராட்சை மருத்துவ பயன்கள் - Raisins benefits in Tamil

Dry grapes benefits in Tamil

உலர் திராட்சை :

பிரியாணி, பாயசம் ,ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை அழகிற்காகவும், சுவைக்காகவும் நாம் பயன்படுத்துவதுண்டு. ஆனால் நம்மில் பலரும் இந்த உலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திருக்க மாட்டோம். பல எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளை கொண்டது தான் இந்த உலர் திராட்சை ஆகும். 

இந்த பதிவின் மூலம் நீங்கள் உலர் திராட்சையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றியும், உலர் திராட்சையின் பல மருத்துவ குணங்களில் சிலவற்றை பற்றியும் தெரிந்து பயன் பெறுங்கள்.

Buy Raisins on Amazon

உலர் திராட்சை உள்ள சத்துக்கள் :

உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், தாமிரம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

Also read:  பாதாம் பருப்பு சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ பயன்கள்!

உலர் திராட்சை செய்வது எப்படி?

இப்போது வீட்டிலேயே உலர் திராட்சையை எளியமுறையில் எப்படி செய்வது என்பது பற்றி பாருங்கள்!!

  • விதையுள்ள அல்லது விதையில்லாத திராட்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • திராட்சை பழத்தை ஒரு சில நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அதனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
  • அதன் பின்னர் திராட்சையை வேக வைக்க வேண்டும். இதற்காக ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஏற்கனவே கழுவி வைத்த திராட்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். திராட்சையின் தோலில் விரிசல் வராதவாறு  4 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளுங்கள். 
  • அதன் பிறகு திராட்சையை நீரிலிருந்து நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
  •  வேகவைத்த திராட்சையை குறைந்த பட்சம் மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்த பின்னர் எடுத்தால் உலர் திராட்சை தயாராகி விடும்!

எப்படி சாப்பிட வேண்டும்?

உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னர் சாப்பிடுவதே மிகச் சிறந்தது மற்றும் இது நல்ல பலன்களை அளிக்கக்கூடிய முறையாகும்.

உலர் திராட்சை மருத்துவ பயன்கள் :

1. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகுவதற்கு வழிவகுக்கும்.

2. உடலில் உணவு செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் உதவும். மதிய நேரங்களில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிடுகிற பட்சத்தில், அதன் பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது சிறந்தது.

3. உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.

4. உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இது மிகவும் உதவுகிறது.

5. உங்களின் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சை மிகவும் உதவும்.

Also read: ஆப்பிள் பழத்தின் மருத்துவ பயன்கள்!!

6. மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடுவதற்கும் உலர் திராட்சை உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர்திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.

7. ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சைப் பழம் உதவுகிறது.

8. மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அந்த நோயில் இருந்து விடுபட உதவும்.

9. கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ மிகவும் உதவுகிறது.

10. மலச்சிக்கல் பிரச்சனை உலர் திராட்சையை சாப்பிட்டால் சரி ஆகும்.

11. உங்களது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.

12. உலர் திராட்சை சாப்பிடுவது உடல் சூட்டை தனிக்கவும் உதவும்.

13. எப்பொழுதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு சிறிது உலர்ந்த திராட்சையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது.

உலர்திராட்சையின் பல எக்கச்சக்கமான மருத்துவ குணங்களில் சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளோம். உங்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உலர் திராட்சை நிச்சயம் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இருப்பினும் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்" என்று சொல்வதற்கு ஏற்றார்போல உலர் திராட்சையையும் அளவோடு சாப்பிடுவதே நல்ல பயன்களை தரும்.

மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகளை வாசிக்க இங்கே 'கிளிக்' செய்யவும்..!

Post a Comment

0 Comments

.