போகி பொங்கல் 2022
போகிப் பொங்கல் என்பது நமது பழைய பொருட்களையும், துணிகளையும் எரிக்கும் பண்டிகை மட்டுமில்லாமல்; நமது வாழ்க்கைக்கு தேவையில்லாத விஷயங்களான கவலை, வறுமை, பொறாமை, காமம், கோபம் உள்ளிட்டவற்றை எரித்து மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், அன்பு, பக்தி உள்ளிட்ட நல்ல விஷயங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வருவதற்காக கொண்டாடப்படுவதாகும். இந்த இனிய போகி பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் இருந்திட போகி பண்டிகை வாழ்த்து கவிதைகள் (Happy Bhogi pongal wishes in Tamil) இதோ இப்பதிவில்!!
Happy Bhogi Pongal Wishes in Tamil 2022
மனதில் உள்ள பொறாமை, காமம், கோபம் உள்ளிட்ட தேவையில்லாத தீய விஷயங்கள் எரிக்கப்பட்டு; அன்பு, இரக்கம், உண்மை உள்ளிட்ட நல்ல விஷயங்கள் பொங்கட்டும். இனிய போகிப் பொங்கல் வாழ்த்துக்கள்!!
வறுமை எரிக்கப்பட்டு செல்வம் பொங்கட்டும். இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்!!
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா எரிந்து உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும். இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உலகெங்கிலும் பகைமை எரிந்து அன்பு பொங்கட்டும். இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த போகி பொங்கல் தினத்தில் உங்களது வாழ்க்கையின் தேவையில்லாத நாட்களை எரித்து, புதியதொரு மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்குங்கள்.
கொரோனா அரக்கனை எரித்து, உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும். இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த போகி பொங்கல் உங்கள் கெட்ட காலங்களை எரிந்து, நல்ல காலங்களை உங்கள் வாழ்க்கையில் பொங்கச் செய்யட்டும்!
வெறுப்பு எரியட்டும்,பகைமை எரியட்டும்,காமம் எரியட்டும்,
கோபம் எரியட்டும், நோய்கள் எரியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும், அன்பு பொங்கட்டும், பக்தி பொங்கட்டும், ஆரோக்கியம் பொங்கட்டும்.
கடந்த காலத்தின் கொடிய நாட்கள் எரிந்து வருங்காலம் மகிழ்ச்சியானதாக பொங்கட்டும். இனிய போகி பொங்கல்!!
உங்களது அன்பிற்குரிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இப்பதிவை பகிர்ந்து போகி பொங்கள் வாழ்த்துக்களை ( Happy Bhogi pongal wishes in Tamil ) தெரிவியுங்கள்.
0 Comments