மனித சமுதாயத்திற்காக அருளப்பட்ட புத்தரின் 15 பொன்மொழிகள் மற்றும் போதனைகளை இப்பதிவில் பார்த்து பின்பற்றி வாழ்வில் அமைதி, செல்வம், மகிழ்ச்சி, பேரானந்தம் என அனைத்து வளங்களையும் பெற்றிடுங்கள்!
Buddha quotes in Tamil
2. சூரியனையும் சந்திரனையும் நம்மால் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவை அதற்குரிய நேரத்தில் தான் பிரகாசிக்கும். அதுபோலவே ஒருபோதும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.
3. கடந்த காலம் உங்களை இன்னும் சிறந்தவனாக தான் மாற்றவேண்டும், கசப்பானவனாக அல்ல.
4. புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் அன்பு பிறக்கும்.
5. உங்கள் மனம் தான் அனைத்துமே. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்.
6. உங்கள் வாழ்க்கையை பற்றி முழுமையாக அறிந்த பின்னரும் கூட உங்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்துபவன் தான் உண்மையான நண்பன்.
7. ஒருநாள் உங்களது வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்கள். அப்போது ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்காக ஏன் இவ்வளவு கவலைப்பட்டோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
8 - 15 Buddha quotes in Tamil
8. உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள். இல்லாவிட்டால் அது உங்களை ஆளும்.
9. அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தன்மைக்கான ஒரே காரணம்.
10. தினமும் காலையில் நாம் புதிதாக பிறக்கிறோம். இன்று நாம் எதை செய்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியானது.
11. உங்களை நீங்கள் முழுமையாக நேசித்தால், ஒருபோதும் மற்றவர்களை வெறுக்க மாட்டீர்கள்.
12. அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே அதை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அதன்மேல் நம்பிக்கை வையுங்கள்.
13. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். எதை உணர்கிறீர்கள, அதையே ஈர்ப்பீர்கள். எதை கற்பனை செய்கிறீர்களோ, அதையே உருவாக்குவீர்கள்.
14. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உண்மையாகவே மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அதற்கு உங்களது மனதில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
15. மற்றவர்களை கைப்பற்றுவதை விட உங்களை நீங்களே கைப்பற்றுவது தான் மிகப்பெரிய இலக்கு.
0 Comments