Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிறந்த தமிழ் கடி ஜோக்ஸ் - Kadi Jokes in Tamil

Kadi jokes in Tamil

உங்கள் நண்பர்களுக்கு SMS, WhatsApp, Status மூலமாக ஷேர் செய்து அவர்களை கடுப்பேத்தி சிரிக்க வைப்பதற்காக சில சிறந்த கடி ஜோக்ஸ், கேள்வி பதில், விடுகதைகள் போன்றவை  இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன...! 

Kadi Jokes in Tamil -

கடி ஜோக்ஸ் 


1. ஒரு வக்கீலிடம்‌  நீங்க காஸ்ட்லி வக்கீல்‌... ஒருகேள்விக்கு ஆயிரம்‌ ரூபாய்‌ வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன்‌. நான்‌ ரெண்டாயிரம்‌ ரூபாய்‌ தரேன்‌. என்னோட ரெண்டு கேள்விகளுக்கும்‌ பதில்‌ சொல்வீங்களானு? கேட்டான்‌ ஒருத்தன்

நிச்சயமாக...! சரி ... உங்க ரெண்டாவது கேள்வி என்ன? னு கேட்டார்‌ வக்கீல்‌.


2. எங்கள்‌ பள்ளியில்‌ இம்மாதத்திற்குள்‌ சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள்‌ வைத்து இழுத்துச்‌ செல்லும்‌ அழகிய தள்ளு வண்டி இலவசம்‌.


3. என்ன டாக்டர்‌! என்னை அறுவை சிகிச்சை பண்ணுவீங்கன்னு பார்த்தா கடி ஜோக்கா சொல்லிட்டிருக்கீங்க.

இதுதான்‌ அறுவை சிகிச்சை


4. பேன்‌ ஏன்‌ மேலேயே சுத்துது? ஏன்‌?

உட்காருவதற்கு அதற்கு கால்‌ இல்லை அதனால்‌ தான்‌.


5. ரொம்ப பிரபலமான ஊர்னு சொல்றியே.. யாராவது பெரிய மனுஷங்க உங்க ஊரில்‌ பிறந்திருக்காங்களா?

"எப்படிங்க பெரிய மனுஷனா பிறக்க முடியும்‌? குழந்தைகள்தான்‌ பிறந்திருக்குங்க...!

6. நர்ஸ்‌ : நாலாம்‌ நம்பர்‌ பெட்‌ இன்னிக்கு சாயங்காலம்‌ வரைக்கும்‌ தாங்காது டாக்டர்‌.

டாக்டர்‌ : அவ்வளவு சீரியஸாவா இருக்காரு?

நர்ஸ்‌ : இல்லை டாக்டர்‌. பெட்டோட கால்‌ ரொம்ப உடைஞ்சு ஓரேடியா ஆடுது. அதான்‌ தாங்காதுன்னேன்‌.


7. என்ன சார்‌ இது. டிரைவிங்‌ கத்துக்‌ குடுக்கறதா காசு வாங்கிட்டு, காரைத்‌ தள்ளிக்கிட்டு வரச்சொல்றீங்க?

புரியாம பேசாதேய்யா 'திடீர்னு பெட்ரோல்‌ தீர்ந்துட்டா

என்ன செய்யணும்‌ னு தெரிய வேண்டாமா?


8. அந்த ஓட்டல்ல இன்னிக்கு இட்லி சூப்பரா இருக்கும்னு எப்படி அடிச்சுச்‌ சொல்ற?

பின்ன... நேத்து நான்தானே அங்கே மாவாட்டினேன்‌.


9. மனைவி: பணம்‌ வந்தா கூடவே கஷ்டமும்‌ வந்துடும்‌.

கணவன்‌ : நான்‌ வரதட்சணை வாங்கி உன்னைக்‌ கல்யாணம்‌ பண்ணிக்கிட்டதைத்‌ தானே சொல்றே?


10. பத்து மணிக்குள்ளே ஆபிஸ்‌ போகலேன்னா வாசல் கதவை அடைச்சுடுவார்‌ எங்க மேனேஜர்‌.

அப்போ லேட்டா போறவங்க கதி!

வராண்டாவிலே தூங்க வேண்டியதுதான்‌.


11. இந்தியாவில்‌ ரொம்ப கவலையான மாநிலம்‌ எது?

Worry sa (ஒரிஸா)


12. பொண்ணுக்கு என்ன வயசாகிறது?

ஆடி வந்தா 16...

ஆடாம வந்தா?


13. குத்தியவுடன்‌ ஏன்‌ ரத்தம்‌ வருது?

யாரு குத்தினதுன்னு பார்க்க வருது.

14. சாப்பிடறதுக்கு முன்னாடியே நிறைய ஏப்பம்‌ வருது. என்ன பண்றது டாக்டர்‌?

ஏப்பம்‌ வர்றதுக்கு முன்னாடியே சாப்பிட்டுடுங்க.


15. உம்‌ பேரு என்னப்பா?

முனுசாமி!

குழந்தைங்க எத்தனை?

மூணு சாமி!


16. ஏழு வருஷமா லவ்‌ பண்றோம்‌. இன்னும்‌ நீங்க கல்யாணப் பேச்சயே எடுக்கலையே?

சரி இப்ப கேட்கிறேன். உனக்கு எப்ப கல்யாணம்?


17. வரவர நம்ம டீச்சருக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது டா..

எப்படிடா சொல்றே?

திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர்‌ யாரு?ன்னு கேட்கறாங்க?


18. அதான்‌ டி.வி.யில்‌ நியூஸ்‌ போடுறானேன்னு நியூஸ்‌ பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு.

ஏன்‌ என்னாச்சு?

இப்பப்‌ பாருங்க... ஓசி பேப்பர்‌ வாங்க வரும்‌ பக்கத்து வீட்டுக்காரங்க, கொஞ்சம்‌ டி.வி. இருந்தாக்‌ கொடுங்க. நியூஸ்‌ பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாங்க.

19. நண்பர்‌ ; 20 வருஷம்‌ முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப்‌ படிச்சாலும்‌ நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

எழுத்தாளர்‌ : உங்களுக்கு ஆச்சர்யம்‌. எனக்கு சந்தேகம்‌.


20. நிருபர்‌ : நீங்க எழுதின நாவல்‌ ரொம்ப சூடா இருக்கே, ஏங்க?

எழுத்தாளர்‌ : கிச்சன்லே நான்‌ சமையல்‌ பண்ணும்‌ போது எழுதினது ஆச்சே.


21. வந்தவர்‌ : டாக்டர்‌ எனக்கு இரண்டு கன்னமும்‌ குழி விழுவதற்கு ஏதாவது செய்யுங்கள்‌.

டாக்டர்‌ : இரண்டு பக்கமும்‌ உள்ள கடவாய்‌ பல்‌லை எடுத்திடுங்க.


22. காதலன்‌ : என்னை மறந்திட்டு வேறு யாரையாவது கல்யாணம்‌ செய்து கொள்‌.

காதலி : அதற்கு என்‌ கணவர்‌ ஒத்துக்கொள்ள வேண்டுமே.


23. நோயாளி : மேஜர்‌ ஆபரேஷன்‌ என்றால்‌ என்ன, மைனர்‌ ஆபரேஷன்‌ என்றால்‌ என்ன?

டாக்டர்‌ : நான்‌ பண்ணினால்‌ மேஜர்‌ ஆபரேஷன்‌, என்‌ 10 வயது மகன்‌ பண்ணினால்‌ மைனர்‌ ஆபரேஷன்‌.


24. சின்ன காயம்‌ தானே... அதுக்கு இவ்வளவு பீஸா... டாக்டர்‌?

இப்படிக்‌ கேட்பீங்கன்னு தான்‌ பேண்டேஜை பெரிசா போட்டிருக்கேன்‌.

Tamil Kadi Jokes

25. என்னைக்‌ கட்டிக்க எந்த இளிச்ச வாயணும்‌ வரமாட்டான்னு சொன்னீங்கல்ல இவருதாம்பா நான் காதலிக்கிற ரமேஷ்‌.


26. உங்க உடம்புல நீர்‌ கோர்த்துக்கிட்டு இருக்கு.

எவ்வளவு செலவானாலும்‌ பரவாயில்லை டாக்டா்‌. எடுத்து பக்கெட்டுல பிடிச்சுக்‌ கொடுங்க.

27. கோர்ட்டுல தலைவர்‌ ஏன்‌ திடீர்னு வாய்ப்பாடு ஒப்பிக்கிறார்‌?

அவர்கிட்ட கணக்குக்‌ கேட்டாங்களாம்‌


28. சினிமா ஆசை இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம்‌ ஏன்‌ நடிப்பு பயிற்சிக்‌ கல்லூரியில்‌ சேர்ந்திருக்கீங்க.

அரசியல்வாதி ஆகிற ஆசை இருக்கே.


29. நேத்து ராத்திரி என்‌ மனைவியை நான்‌ கைநீட்டி அடிச்சுட்டேன்‌?

ஐயோ அப்புறம்‌ என்னாச்சி?

அதுக்குள்ளே என்‌ மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப்‌ போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக்‌ கலைச்சுட்டா.


30. ரன்னிங்‌ ரேஸ்ல எவ்வளவுதான்‌ கால்‌ வேகமாக ஓடினாலும்‌ பரிசு கைக்குத்தான்‌ கிடைக்கும்‌.


31. ஏன்‌ உங்க மாப்பிள்ளை எப்ப உங்க வீட்டுக்கு வந்தாலும்‌ ராத்திரி மட்டும்‌ தங்கவே மாட்டேங்கிறாரு?

அவரு எங்க வீட்டுல தலைவச்சுப்‌ படுக்க மாட்டேன்னுஒரு தடவை சண்டையில சொல்லிட்டாரு...


32. என்ன சார்‌? ஃபைவ்‌ ஸ்டார்‌ ஹோட்டல்‌ அப்படீங்கறிங்க, சாப்பாட்ல கல்‌ இருக்கே?

ஃபைவ்‌ ஸ்டார்‌ ஹோட்டல்ங்கிறதுக்காக வைரக்‌ கல்லா சார்‌ போட முடியும்‌?


33. எப்போ பார்த்தாலும்‌ மரத்து மேல்‌ ஏறி உக்கார்ந்திருக்காரே யார் இவர்‌? 

இவர்‌ தாங்க எங்க கிளை செயலாளர்‌.


34. போலீஸ்காரர்‌ அடிச்ச உடனே அந்த ஆளுக்கு பேச்சே வர்லைங்க ஏன்‌?

ஊமைக்காயம்‌ பட்டுடுத்தாம்‌.


35. என்னங்க! கல்யாணப்‌ பொண்ணுக்கு கழுத்துல, இடுப்புல, கைலன்னு எல்லா இடத்திலேயும்‌ பூவிலேயே அலங்காரம்‌ பண்ணி இருக்கீங்க?

நீங்கதானே பொன்‌ வைக்கிற இடத்துல பூவை வைங்கன்னு சொன்னீங்க.


36. உங்க கடிகாரம்‌ ஓடாதா?

நான்‌ தான்‌ அதை கையில்‌ கட்டியிருக்கேனே.


37. உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே! உங்களுக்கு தெரியுமா?

எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க!


38. தண்ணீரை தண்ணி னு சொல்லலாம்! ஆனா பன்னீரை பன்னி னு சொல்ல முடியுமா?


39. அவர் வாரிய தலைவரா!

ஆமாம், பல பேர் காலை வாரிய தலைவர்!


40. ஏன் பாத்ரூம் கதவை திறந்து வச்சுகிட்டே குளிக்கிற?

அப்பதான் யாராவது எட்டிப் பார்த்தா தெரியும்!


இந்தப் பதிவில் நீங்கள் பார்த்த  கடி ஜோக்ஸ், கேள்வி பதில்கள் அனைத்துமே உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் இதனைப் பகிர்ந்து அவர்களையும் கடுப்பேத்தி சிரிக்க வையுங்கள்!

Post a Comment

0 Comments

.