கடுக்காய்
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்துப் பொருள்களில் ஒன்று கடுக்காய். இதன் அறிவியல் பெயர் Terminalia chebula என்பதாகும். சித்தர்கள் கடுக்காயின் மகத்துவங்களை பற்றி பல பாடல்கள் எழுதியுள்ளனர். "காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே" என்ற ஒரு பாடலே கடுக்காய் எவ்வளவு மருத்துவ நன்மைகளை கொண்ட வரப்பிரசாதம் என்பதை நமக்கு உணரச் செய்கிறது. காலையில் இஞ்சு, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கம்பின் உதவியோடு குறுகி நடக்கும் கிழவன் கூட கம்பை தூக்கி எறிந்துவிட்டு ஆனந்தமாய் நடப்பான் என்பதே இந்த சித்தர் பாடலின் பொருள். எனவே இதன்படி கடுக்காயோடு இஞ்சியையும், சுக்கையும் சேர்த்து சாப்பிடுவது மிகச்சிறந்த பலனை அளிக்கக்கூடியது. இதுபோலவே பல சித்தர்களின் பாடல்கள் கடுக்காயின் மகத்துவங்களை கூறுகின்றன.
எண்ணற்ற பல மருத்துவப் பயன்களைக் கொண்டது இந்த கடுக்காய். வாதம், பித்தம், தோல் சார்ந்த நோய்கள், உடல் வலி, ஆண்மை குறைவு, நீரழிவு, அதிக உடல் எடை, மூல நோய், கண் குறைபாடுகள் என பலதரப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக கடுக்காய் பயன்படுகிறது. கடுக்காயின் சில முக்கிய மருத்துவ பயன்களை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து பயன் பெறுங்கள்.
கடுக்காய் எப்படி சாப்பிட வேண்டும்?
இன்றைக்கு அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கடுக்காய் பொடி கிடைக்கிறது. இரவு உணவு சாப்பிட்டு முடித்த பிறகு கடுக்காய் பொடியை வெந்நீரில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
கடுக்காய் பயன்கள் - Kadukkai Benefits in Tamil
உடல் வலி தீர
உடலில் ஏற்படக்கூடிய வலிகளைப் போக்க கடுக்காய் பயன்படுகிறது. குறிப்பாக மூட்டு வலிக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும். வலிகள் நீங்கி, உடலின் அனைத்து பகுதிகளும் எளிதாக செயல்படுவதற்கு கடுக்காய் உதவுகிறது.
உடல் எடை குறைய
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்க கடுக்காய் உதவுகிறது. எனவே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுக்காய் நல்ல பலனை அளிக்கும்.
நீரிழிவு நோய் குறைய
கடுக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. கடுக்காய் சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோயின் அறிகுறிகளான அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்துல், உடல் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஆண்மை அதிகரிக்க
ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் கடுக்காய் பயன்படுகிறது. ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் கடுக்காயை தொடர்ந்து சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
தோல் நோய் குணமாக
கடுக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் தோல் மற்றும் முடி சார்ந்த நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
கண் நோய்கள் குணமாக
கண் சார்ந்த குறைபாடுகள் மற்றும் நோய்களுக்கு கடுக்காய் சிறந்த மருந்தாக திகழ்கிறது. வறண்ட கண்கள், நீர் நிறைந்த கண்கள், கண்களில் ஏற்படக்கூடிய தொற்றுகள், வீங்கிய கண்கள் உள்ளிட்ட பல கண் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கடுக்காய் மிகவும் உதவுகிறது.
பல் ஆரோக்கியம்
கடுக்காய் பொடியை பயன்படுத்தி பல் துலக்கினால் பல் ஈறு வலி குணமாகும். பல் ஈறில் இருந்து ரத்தம் வருவது நிற்கும். பற்கள் எப்போதும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பேன் பொடுகு தொல்லை நீங்க
ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெயுடன் 3 கடுக்காய்களை போட்டு அவை பிளக்கும் வரை காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் ஏற்படக்கூடிய பொடுகு தொல்லை, பேன் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும். மேலும் முடி உதிர்வு பிரச்சனையும் நீங்கி முடியின் வலிமையும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
புத்தி கூர்மை பெற
மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை நீக்குவதற்கும்; மனதிற்கு தெளிவு, புத்தி கூர்மை, மன அமைதி தருவதற்கும் கடுக்காய் பயன்படுகிறது.
அஜீரண கோளாறு நீங்க
உடலில் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு கடுக்காய் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. இது உடலில் உணவு செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
புண் குணமாக
கடுக்காய் பொடியை புண்கள் அல்லது காயங்களின் மீது தூவுவது, அவ்விடங்களில் தொற்று ஏற்படுவதை தடுக்கும். புண் விரைவில் குணமடையும்.
வாதம், பித்தம்
கடுக்காய் உடலில் ஏற்படக்கூடிய வாதம் மற்றும் பித்த நோய்களை குணப்படுத்த மிகவும் பயன்படுகிறது.
மூல நோய் குணமாக
மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு கடுக்காய் மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது. மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.
கடுக்காயின் எண்ணற்ற மருத்துவ பயன்களில் (Kadukkai benefits in Tamil) சில மட்டுமே இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த தகவல்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இப்பதிவை பகிருங்கள். நன்றி!
0 Comments