Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் வான் சிறப்பு அதிகாரம் 2 - விளக்கம்

திருக்குறள்

அதிகாரம் - வான் சிறப்பு


Thirukkural Vaan Sirappu


11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

பொருள் :

வானிலிருந்து மழை பொழிவதனால் தான் இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழியாமல் வாழ்ந்து வருகின்றன. எனவே மழை நம்மை அழியாமல் காக்கும் அமிர்தம் என பாராட்டப்படுகிறது.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை.

பொருள் :

நாம் உண்ணும் உணவுகளை சமைப்பதற்கும், உண்ணுவதற்கு உதவியாக இருக்கும் நீருக்கும் காரணம் மழைதான்.


13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

பொருள் :

மழை உரியகாலத்தில் பெய்யவில்லை என்றால், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பசிப்பிணியால் வருந்தும்.

14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் 
வாரி வளங்குன்றிபொருள் :க் கால்.

பொருள் :

உலகத்தை வாழ வைக்கும் வருவாயாக விளங்கும் மழை பெய்யவில்லை என்றால், நிலத்தை உழுது பயிரிடும் தங்கள் தொழிலை செய்ய முடியாமல் உழவர்கள் வருந்துவார்கள்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே 
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள் :

உரிய காலத்தில் பெய்யாமல் உலக மக்களை தவிக்க வைப்பதும், தவிக்கும் மக்களுக்காக பெய்து அவர்களை வாழ வைப்பதும் மழை தான்.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே 
பசும்புல் தலைகாண் பரிது.

பொருள் :

பசுமையான புல் மிகவும் எளிமையானது என்றாலும், அதைக் கூட நம்மால் மழை பெய்தால் தான் பார்க்க முடியும்.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி 
தான்நல்காது ஆகி விடின்.

பொருள் :

உரிய காலத்தில் மழை பெய்யவில்லை என்றால் பரந்து நீண்டு விளங்கும் பெருங்கடலின் பலமும் குறைந்து போய்விடும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பொருள் :

மழை உரிய காலத்தில் பெய்யாமல் வறட்சி ஏற்பட்டு விட்டால், தெய்வங்களின் கோவில்களில் தினசரி வழிபாடும், திருவிழாக்களும் நடைபெறாமல் நின்று மீண்டும்.

19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம்  வழங்காது எனின்.

பொருள் :

வானத்திலிருந்து மழை உரிய காலத்தில் பெய்ய வில்லை என்றால், தானம் செய்வது, தவம் உள்ளிட்ட ஆன்மீகப் பணிகளை செய்வது என அனைத்தும் தடைபட்டுவிடும்.

20. நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் 
வான்இன்று அமையாது ஒழுக்கு.

பொருள் :

இந்த உலகில் நீர் இல்லாமல் எந்த உயிராலும் வாழவே முடியாது. அந்த நீரை எவ்வளவு பெரிய செல்வாக்கு கொண்ட மனிதராலும் மழை பெய்யவில்லை என்றால் பெற முடியாது.

Post a Comment

0 Comments

.