Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வழிகாட்டும் இலவச இணையவழி நிகழ்ச்சி..! TNPSC,UPSC - Hindu Tamil & Shankar IAS Acadamy

TNPSC Hindu Tamil, Shankar IAS Academy


அரசு வேலை

தாம் ஒரு அரசு அதிகாரியாக ஆக வேண்டும் என்ற லட்சியம் பல இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தொழில்கள், நிறுவனங்கள் எல்லாம் முடங்கிபோய்விட்டன. பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில்  அரசு வேலையில் இருப்பவர்கள் மட்டுமே எந்தவிதமான பொருளாதார சிக்கலும் இன்றி நிம்மதியாக இருக்கிறார்கள். இதன் மூலமாகவே அரசு வேலையின் மதிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

அரசு போட்டித் தேர்வுகள்

மத்திய மற்றும் மாநில அரசுககள் பல்வேறு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக பல போட்டித் தேர்வுகளை நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடத்திவருகின்றன. இந்தத் தேர்வுகளை எழுவதற்காக பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து படித்து வருகிறார்கள். குறிப்பாக UPSC, TNPSC, SSC, RRB போன்ற அரசு போட்டித் தேர்வுகள் பல லட்சக்கணக்கான மாணவர்களால் எழுதப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் இந்த போட்டித்தேர்வுகள் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாமலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அரசு வேலை என்ற லட்சியத்தை அடைய முடியாத சூழல் ஏற்ப்படுகிறது. 

போட்டித் தேர்வுகள் பற்றிய முழுமையான விவரங்கள், தேர்வுகளை எதிர்கொள்ளும் யுக்தி, எப்படி படிக்க வேண்டும் எதைப் படிக்க வேண்டும் என்று அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் மாணவர்களே தேர்வில் எளிதில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்கிறார்கள். 

எனவே TNPSC, UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் அந்தத் தேர்வுகளை பற்றிய அனைத்து விவரங்களையும் கைக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இதில் தெளிவாக இருப்பவர்களால் மட்டுமே போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டு அரசு வேலை என்ற இலட்சியத்தை அடைய முடியும்.

'ஆளப் பிறந்தோம்' இணையவழி நிகழ்ச்சி

அரசு வேலையை தங்களின் கனவாக கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக 'இந்து தமிழ்' நாளிதழ் மற்றும் 'சங்கர் ஐஏஎஸ் அகாடமி' இணைந்து இலவசமாக 'ஆளப் பிறந்தோம்' என்ற இணைய வழி நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு (20-06-2021) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. வீட்டிலிருந்தபடியே உங்களால் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியும். இந்த இணைய வழி நிகழ்ச்சியில் TNPSC, UPSC உள்ளிட்ட  அரசு தேர்வுகளை பற்றிய முழுமையான விவரங்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். எந்தெந்த தேர்வுக்கு எந்தெந்த கல்வித் தகுதி உடையவர்கள் தகுதியானவர்கள்,  எப்படி படிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், எப்படி தேர்வில் எளிதில் வெற்றி பெறுவது உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுகள் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்த 'ஆளப் பிறந்தோம்' நிகழ்ச்சியின் மூலம் நிச்சயம் பதில் கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில் அரசு பணியில் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் டாக்டர்.வைஷ்ணவி ஆகியோர் அரசுத் தேர்வுகள் பற்றி கருத்துரையாற்ற உள்ளனர். இதன் மூலம் அரசு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேர்வுகளை எதிர்கொள்வது பற்றிய பல முக்கியமான தகவல்களும், சிறந்த வழிகாட்டுதல்களும் கிடைக்கும். எனவே அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் மறவாமல் கலந்து கொள்ளுங்கள். 'ஆளப் பிறந்தோம்' இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள 'Register Now' பட்டனை கிளிக் செய்து உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். மேலும் அரசு போட்டித் தேர்வுகளை எழுத தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவை SHARE  செய்து அவர்களுக்கும் இந்த பயன்தரும் நிகழ்ச்சியைப் பற்றி மறவாமல் தெரியப்படுத்துங்கள்!

நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே இப்போதே பதிவு செய்யுங்கள்👇


Post a Comment

0 Comments

.