சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் ஒரு புகழ்பெற்ற இந்து துறவி ஆவார். இவர் ஜனவரி 12, 1963ஆம் ஆண்டு கல்கத்தா நகரில் பிறந்தார். நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் விவேகானந்தரின் இயற்பெயர் ஆகும். இவரது தந்தையின் பெயர் விஸ்வநாத் தத்தா மற்றும் இவரது தாயின் பெயர் புவனேஸ்வரி தேவி ஆகும். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார். ஆன்மீக துறவியான சுவாமி விவேகானந்தர் தனது எழுச்சி மிகு சொற்பொழிவுகளால் எண்ணற்ற இளைஞர்களை ஆன்மீகப் பாதையில் ஈர்த்தார். இந்தியா மட்டுமனறி பல வெளிநாடுகளிலும் விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். ஜூலை 4 1902 ஆம் ஆண்டு விவேகானந்தர் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பொன்மொழிகள் இன்றும் பல இளைஞர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கின்றது.
சுவாமி விவேகானந்தரின் சிறந்த பொன்மொழிகள் (Vivekananda Tamil quotes images) சிலவற்றை இப்பதிவில் உங்களுக்காக கொடுத்துள்ளோம். இந்தப் உயர்ந்த பொன்மொழிகளை உங்கள் வாழ்வில் பின்பற்றி, நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
விவேகானந்தர் பொன்மொழிகள் - Vivekananda Quotes in Tamil
முதலில் உங்களை நீங்கள் கைப்பற்றுங்கள். பிறகு இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உங்களுடையதாக மாறும்.
- சுவாமி விவேகானந்தர்
பயம் தான் நமது மிக மோசமான எதிரி.
ஒருமுறை நான் கடவுளிடம் எனக்கு பலம் தருமாறு வேண்டினேன். அவர் அதற்கு கடினமான சூழ்நிலைகளை எனக்கு தந்தார். கடினமான சூழ்நிலைகளில் இருந்து தான் நமக்கு பலம் பிறக்கிறது.
ஒரு மனிதன் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, அவன் இந்த உலகின் கட்டுப்பாட்டில் உள்ளான் என்று அர்த்தம். ஆனால் எப்போது அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறானோ, அப்போது இந்த உலகையே தனது கைக்குள் கொண்டு வந்து விடும் ஆற்றல் அவனுக்கு வந்து விடுகிறது.
- விவேகானந்தர்
ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டும் செய்யுங்கள். அந்த செயலை செய்யும் போது அதில் உங்கள் முழு ஆன்மாவையும் ஈடுபடுத்தி செய்யுங்கள்.
- சுவாமி விவேகானந்தர்
பிறரை வெறுப்பதால் நீங்கள் உங்களையே வெறுக்கிறீர்கள். பிறர் மீது அன்பு செலுத்துவதால் நீங்கள் உங்கள் மீதும் அன்பு செலுத்துகிறீர்கள்.
நீங்கள் தான் உங்கள் சொந்த விதியின் எஜமானர்.
உன்னையே முதலில் உன்னால் நம்ப முடியவில்லை என்றால் கடவுளை நம்பி எந்த பயனும் இல்லை.
உலகில் உள்ள அனைத்து எதிர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளும் 'பயம்' என்ற ஒன்றிலிருந்து மட்டுமே பிறக்கிறது.
- சுவாமி விவேகானந்தர்
இந்த உலக வாழ்க்கையில் தேடி பெறக்கூடிய இன்பங்களால் எந்த நிலையான பயனும் இல்லை என்று எப்போது ஒருவன் முடிவுக்கு வருகிறானோ, அப்போது அவனிடம் ஆன்மீகம் பிறக்கிறது.
சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் மிகமோசமான தீய குணமாகும். எப்போது சுயநலம் முழுவதுமாக விலகுகிறதோ, அப்போது கடவுள் மட்டுமே முழுவதுமாக இருப்பார்.
- சுவாமி விவேகானந்தர்
ஒரு நாடு அந்நாட்டின் பெண்களை எப்படி நடத்துகிறதோ, அதை பொருத்தே அந்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது.
Vivekananda Tamil Quotes
எந்த அளவிற்கு நாம் பிறருக்கு நன்மை செய்கிறோமோ, அந்த அளவிற்கு நமது இதயம் தூய்மை படுத்தப்படும். தூய்மையான இதயம் தான் கடவுளின் இருப்பிடம்.
- விவேகானந்தர்
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்களுடன் பேசுங்கள். இல்லாவிட்டால் இந்த உலகில் ஒரு அறிவார்ந்த நபரை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பை தவறவிடலாம்.
ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்கள். நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல்.
உண்மையே எனது கடவுள். இந்த பிரபஞ்சமே எனது நாடு.
- சுவாமி விவேகானந்தர்
பிறருக்கு எவன் ஒருவன் உதவுகிறானோ, அவனுக்கு கடவுளே உதவுவார்.
- சுவாமி விவேகானந்தர்
ஒருபோதும் உங்களை நீங்களே பலவீனமானவர்கள் என்று சொல்லாதீர்கள். உங்களிடம் எதையும் சாதிக்கும் ஆற்றல் உள்ளது. நம் அனைவரிடமும் ஒரே ஒளிமயமான ஆன்மாவே உள்ளது, அதன் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும்!
உங்கள் இதயத்திற்கும் மூளைக்கும் எப்போதாவது மோதல் ஏற்பட்டால், உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள்.
நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகிறது. எனவே எதை எண்ணுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.
- விவேகானந்தர்
தியானம் என்பது ஞானத்தை பெறுவதற்கான மிகப்பெரிய அறிவியல் பூர்வமான முறையாகும். தியானத்தின் சக்தி இல்லாமல் ஞானம் இல்லை.
யாரையும் வெறுக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் செலுத்தும் வெறுப்பு என்றைக்காவது ஒருநாள் உங்களிடம் திரும்பி வருவது உறுதி. எனவே அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். நிச்சயம் அந்த அன்பு உங்களிடம் ஒரு நாள் திரும்பி வரும்.
- சுவாமி விவேகானந்தர்
ஆன்மாவிற்கு பாலினம் கிடையாது, ஜாதி கிடையாது, குறைபாடு கிடையாது.
நடந்து முடிந்தது எல்லாம் நடந்து முடிந்தது தான். எனவே அதைப் பற்றி சிந்திக்காதீர்கள். மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். மரணத் தருவாயில் கூட பலவீனமானவர்களாக இருக்காதீர்கள்.
- விவேகானந்தர்
உங்களது ஆரோக்கியம், அறிவு, ஆன்மீகம் ஆகிய மூன்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் விஷம் என்று கருதி நிராகரித்து விடுங்கள்.
- சுவாமி விவேகானந்தர்
0 Comments